Hot Posts

6/recent/ticker-posts

கல்விப் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு..!!


கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் பட்டணம் ஊராட்சி உயர்நிலை பள்ளியில் புதிதாய் கட்டப்பட்ட 3  வகுப்பறைகள் திறக்கப்பட்டது. 

சூலூர் ஒன்றியம் பட்டணம் அரசு உயர்நிலை பள்ளியில் 180 மாணவர்கள் 115 மாணவியர் ஆக மொத்தம் 295 பேர்  பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு மொத்தம் 14 ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் வகுப்பெடுத்து வருகிறார்கள். மொத்தம் எட்டு வகுப்பறைகளைக் கொண்ட இந்த பள்ளி, மாணவர்களுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் ஆய்வுக்கூடங்கள், நூலகங்களில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

ஆகையால் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை அனுமதியுடன்   தமிழக அரசின்  'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ்   Milacron India Private Limited ( Mold Masters Division), Coimbatore நிறுவனத்தின் CSR நிதியுதவியில் மூன்று புதிய வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முன்னின்று நடத்தி உள்ளது. புதிய வகுப்பறைகள் பட்டணம் உயர்நிலை பள்ளிக்கு அர்பணிக்கும் நிகழ்வு 6.3.2024 அன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில,

சிறப்பு விருந்தினராக:

கிராந்தி குமார் பாடி 

கோவை மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை:

ஆர் . பாலமுரளி,

Chief education officer,  Coimbatore 

ஆர்.  ஜெயசங்கர்

District education officer,  Coimbatore 

ஆல்பிரட் நோபல்

Vice president 

Milacron India Private Limited 

Mold Masters Division, Coimbatore

 ரகு (எ) துரைராஜ்

ஒன்றிய கவுன்சிலர்,

 சூலூர் ஒன்றியம்

என். சரவணன்,

Senior manager- HR,

Milacron India Private Limited 

Mold Masters Division, Coimbatore

 கோமதி செல்வகுமார் 

பஞ்சாயத்து தலைவர், பட்டணம்

டி.சுரேஷ் 

செயலாளர், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு 

.ஆர்.   தாமோதரன் தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டணம்,ஸ்ரீ கோவை 

ஆர்.  கிருஷ்ணவேணி பொருளாளர், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.