Hot Posts

6/recent/ticker-posts

ரேசன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதி 96 வது வட்ட கழகத்திற்குட்பட்ட பழனியப்பா லே அவுட் மக்களின் கோரிக்கையை ஏற்று  ரூபாய் 15,00,000/-* மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிட அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து இதற்காக பூமி பூஜையில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள்  அமைச்சரும்  கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன்  கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை சண்முகம் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர், மதுக்கரை நகர  செயலாளர் கே. சண்முகராஜா, குறிச்சி பகுதி  செயலாளர் எம். பெருமாள்சாமி, 96 வது வட்ட கழக செயலாளர் கே.என்‌. செந்தில்குமார், 94Aவட்ட கழக செயலாளர் மாணிக்கவாசகம், 96Aவட்ட கழக செயலாளர் உதயகுமார், மாவட்ட தகவல் தொழிலநுட்பப்பிரிவு இணைச்செயலாள ராஜேஷ், குறிச்சி பகுதி தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் சுரேஷ் கே.தாஸ் மற்றும் , கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.