Hot Posts

6/recent/ticker-posts

கோவையில் மஜக சார்பில் _மாபெரும்_கிரிக்கெட்_போட்டி.

கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மினார் ஸ்போர்ட்ஸ் கிளப், குனியமுத்தூர் ஏடி7எஸ் அரேனா நண்பர்கள் மற்றும் ஆர்.டூ.ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய 16 அணிகள் பங்குபெற்ற 'மஜக வெற்றிக்கோப்பைக்கான" மாபெரும் கிரிக்கெட் போட்டி மாவட்டச் செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் தலைமையில் குனியமுத்தூர் ஏடி7எஸ் அரேனா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 


இதில் மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் முறையில் மோதியது. இறுதி போட்டியில் கிங் காங் அணி வெற்றி பெற்று மஜக வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்த அணிக்கு கோப்பையும், ரூபாய் 8,000 வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு கோப்பையையும், ரூபாய் 5,000, மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு கோப்பையும் மற்றும் 3,000 பரிசுத்தொகையை மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் M.H ஜாபர் அலி, மாநில இளைஞர் அணி பொருளாளர் P.M.A.பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் H. M முகம்மது ஹனீஃப்,  S. A.ஜாபர் சாதிக்,KTU காஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப்ரோஸ்கான், செய்யது இப்ராஹீம், அபி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் J. பயாஸ், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் சலீம், மாவட்ட ஐ.டி விங் செயலாளர் சிராஜ், மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் ஹக்கீம், வர்த்தக அணி துணை செயலாளர் ஜாஹீர், தெற்கு பகுதி செயலாளர் சாதம் மற்றும் ஜியா வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஆருண் மற்றும் மினார் ஸ்போர்ட்ஸ் கிளப் பாசித், சாஹித், நிவாஸ், ஏடி7எஸ் அரேனா நண்பர்கள் ஆஷிக், சிகாஷ், ஆர் டூ ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் நவாஸ், ஆஷிக், சரவணம்பட்டி புக் மார்க் ஜப்பார், சிறப்பு பேச்சாளர்.