Hot Posts

6/recent/ticker-posts

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்- 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் -மங்கலம் ஊராட்சியில்  மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் திமுக கட்சியின் கொடியேற்றப்பட்டது.


பின்னர்  மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, மங்கலம் அரசு துவக்கப்பள்ளி, சின்னப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அக்ரஹாரப்புத்தூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புக்கிளிபாளையம் புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் , மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், மங்கலம் ஊராட்சி மன்ற பணியாளர்க்கும் , மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மற்றும் பொதுமக்களுக்கு என 2000 பேருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அப்துல்பாரி,  தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் முகமதுஇத்ரீஸ், திமுக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்முகமதுஜுனைத்,  தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணகுமார்,முகமது உசேன்,இடுவாய் சுரேஷ், புத்தூர் சபியுல்ரஹ்மான் மற்றும் இளைஞர் அணியைச்  சேர்ந்த சிவா ,கார்த்தி , கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்..