Hot Posts

6/recent/ticker-posts

மரக்கன்றுகள் நடும் விழா..!

கோவை மாவட்டம் , மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் பல்லுயிர்களுக்கான பசுமை வனம் உருவாக்கும் திட்டம் - துவக்க நிகழ்வு: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடைபெற்றது. 

பேரூர் பெரியகுளத்தில் ஆறாண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் வார களப்பணி, அக்குளத்தை தூர்வாரி பின்பு, செங்குளம், வெள்ளலூர் குளம் தூர்வாருதல், 12 குட்டைகளை தூர்வாரி நீர் கொண்டு வந்து சேர்க்கும் பணி, குளக்கரையில், நகரின் ரிசர்வ் பகுதிகளில் மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்குதல், நீர் நிலைகளில் பனை விதைகளை ஊன்றுதல், வாய்க்காலை தூர்வாரி கண்காணித்தல், குளக்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல், அணைக்கட்டுகளில் களப்பணி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா உருவாக்குதல்  போன்ற நீர்நிலை மற்றும் பல்லுயிர்களை மேம்படுத்துவதற்கான  தன்னார்வப் பணி தற்போது 329 வாரங்களை எட்டி உள்ளது.மேலும், கோவை மாவட்டம் , மதுக்கரை வனச்சராகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் பசுமை வனம் உருவாக்கும் திட்டத்தின் படி கோவை மாவட்டத்தின் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் விதமாக பல்லுயிர்ச் சூழலை மேம்படுத்திட தமிழ்நாடு வனத்துறை, கோவை,  மற்றும் கிராம குழுக்கள் அனுமதியுடன் ZF Windpower Coimbatore Pvt Ltd நிறுவனத்தின் CSR நிதியுதவி மூலம்  27 ஏக்கர் பரப்பளவில்  மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 7 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  

இந்தநிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி மரக்கன்றுகள்  நட்டு துவங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம், ZF Wind power Coimbatore, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.