கோவை மாநகராட்சி 84வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் அலிமா ராஜா உசேன் .இவர் எஸ்.டி.பி.ஐ.கட்சியை சார்ந்தவர். இவர் தனது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை பெற்று தருவதில் சலிக்காமல் உழைத்து வருபவர்.
இந்த மக்கள் பணி 84-வது வார்டு பொது மக்களிடையே இவர் மீது நம்பிக்கையும் நற்சான்றிதழையும் பெற்று தந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இந்த நிலையில் உலக மகளிர் நாள் முன்னிட்டு இந்த வார்டிற்கு உட்பட்ட ஜே.எஸ்.ஜே. குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜா உசேனிற்கு விழா ஏற்பாடு செய்து பாராட்டி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் ஜே.எஸ். ஜே. குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் பைசில் தலைமை வகித்தார். மேலும் எஸ் டி.பி.ஐ.கட்சி மாநில செயலாளர் ராஜா உசேன்,மாவட்ட தலைவர் முஸ்தபா தொகுதி தலைவர் உமர் செரீப் மற்றும் வார்டு நிர்வாகிகள் காஜா முகமது, சேக் அப்பாஸ் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.