கோவை மாநகராட்சி 84வது வார்டு ஜி.எம். நகர் பகுதியில் நடைபாதை பூங்கா அமைவதற்கு மாமன்ற உறுப்பினர் அலிமாராஜாஉசேன் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை பெற்று பணிகளை துவக்கினார்.
பணிகள் முடிவடைந்து இன்றைக்கு நடைபாதை பூங்கா திறக்கப்பட்டது புதர்மண்டி கிடந்த இடத்தில் புதிய பூங்காஅமைந்திருக்கிறது மக்கள் பயன்பாட்டிற்கு மாமன்ற உறுப்பினர் செய்த முயற்சிகள் மக்கள் மன்றத்திலே பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நடைபாதை திறப்பு விழாவிற்கு வருகை தந்து கல்வெட்டு திறந்து வைத்தார்.மேலும்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன், கோவை மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா, பொதுச் செயலாளர் அப்துல் காதர் மற்றும்
துணை தலைவர் அப்துல் ரஹீம், பொருளாளர் இக்பால்,வர்த்தக அணி தலைவர் இப்ராஹீம், தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் உமர் ஷெரீஃப், செயலாளர் சபீர், வார்டு நிர்வாகிகள் காஜா,ஜமாலுதீன்,ஷேக் குஞ்சு முஹம்மது உள்ளிட்டஎஸ்டி.பி.ஐகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.