தமிழ்நாடு முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் 71- வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அறிவுறுத்தலின் படி, கோவை சிங்காநல்லூர் 61 வட்ட கழகம் சார்பில் கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் சிங்காநல்லூர் பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு சிங்கை சம்பத் மற்றும் இளவரசு ஆகியோர் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிமாக உணவு தட்டுகள் வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் 61-வது வார்டு கவுன்சிலர் ஆதி மகேஸ்வரி திராவிட மணி வட்ட செயலாளர் தென்னவர் செல்வம் மற்றும் திராவிட மணி சிங்கை சம்பத் இளவரசு திருமூர்த்தி பூங்கொடி மாரிமுத்து சுப்பிரமணியம் ராமநாதன் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு உற்சாகமாக முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.