மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை மத்திய மாவட்ட என்எச்..ரோடு கிளையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி, தண்ணீர் பந்தல் மற்றும் தர்பூசணி பழம் வழங்கும் நிகழ்ச்சி கிளை தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது
மரக்கடை பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர், 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் ஏற்றி வைத்தார், ஐந்து முக்கு சந்திப்பில் உள்ள கொடியை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் ஏற்றி வைத்தார்
கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து மரக்கடை மற்றும் ஐந்து முக்கு சந்திப்பில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் ஜூஸ் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் , மாநில செயற்குழு உறுப்பினர் கேபிள் ரபீக்,மாவட்ட துணைத் தலைவர் நூருதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் அசாருதீன், பைசல் ரஹ்மான், சிக்கந்தர் பாஷா, ஆசிக் அகமது அணி நிர்வாகிகள் யூசுப், பேரிங் செரீப், ஜுபைர், இப்ராஹிம், அபு, அசாருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், வப்பு ரஹ்மத்துல்லா, கிளை நிர்வாகிகள் ஹாரிஸ் , ரபீக், நாசர் , ஜுபைர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.