முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை இழிவாக பேசியதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அ.தி.மு.க.சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேசிய எடப்பாடி பழனிச்சாமி , எம்ஜிஆர் முகத்தை காட்டி தான் தி.மு.க.ஆட்சிக்கு வந்தது என்பதை மறைந்து விடக் கூடாது.காற்றில் கூட ஊழல் செய்த ஆ.ராசா எம்ஜிஆர் பற்றி பேச தகுதியில்லை என்று கடுமையாக சாடினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.