மாதம்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினார். உடன் தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் மாதம்பட்டி ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாதம்பட்டி ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரசாத், தீத்திபாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பத்மநாபன், கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.