ஈரோடு மாவட்டம் பெருந்துறை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகம் மற்றும் பேக்கரியில் அதிக விலைக்கு டீ உள்ளிட்ட உணவு பண்டங்கள் விற்பனை. அரசு பேருந்து தடையை மீறி இந்த கடையில் சட்டவிரோதமாக நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவது கண்டறியப்பட்டு, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்த ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் சேலம் தேசிய நெடுஞ்சாலைலுள்ள பெருந்துறை குன்னத்தூர் ரோடு மேம்பாலம் அடுத்த கோவை சாலையிலுள்ள கொங்கு பேக்ஸ் என்ற கடை உள்ளது இந்த கடையில் டீ 20; க்கும் வலுக்கட்டாயமாக விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் அரசு விதிகளை மீறி அரசு பேருந்துகள் வலுக்கட்டாயமாக இந்த கடையில் நிறுத்தப்படுகிறது இதன் காரணமாக பொது மக்கள் பெரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடனடியாக இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறை ,உணவு பாதுகாப்புதுறை, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை உடனடியாக உரிய தீர்வுகாண வேண்டும்.
அதிக விலைக்கு விற்கப்படுவது தரமில்லாத பொருட்கள், காலாவதி தேதி, விலை குறிப்பிடாத பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன்படி, தெருவில் கூவி விற்கும் உணவுப் பொருளாக இருந்தாலும், பெரிய உணவகங் களில் விற்கப்படும் உணவாக இருந்தாலும், உணவுப் பொருளை விற்பதற்கான உரிமத்தை உணவுப் பாதுகாப்பு துறையிடம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாமல் விற்பனை செய்வது சட்டப்படி தவறு.
பாமர மக்கள் பயணம் செய்யும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதிகள் இல்லை. இருக்கும் கழிவறைகள் சுகாதாரமற்றதாகவும் உள்ளது.
இத்தகைய உணவகங்களில் தான் பேருந்தை நிறுத்தி பயணிகளை அவதிக்குள்ளாக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு இதில் என்ன லாபம்? அந்த உணவகத்தோடு இவர்களுக்கு என்ன தொடர்பு என்பதை சம்மந்தப்பட்ட துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.