Hot Posts

6/recent/ticker-posts

பெண் ஊராட்சித் தலைவரின் தனித்துவ பணிகள்

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் அப்பநாய்க்கன் பட்டி ஊராட்சித் தலைவர் சாந்தி ராஜேந்திரன். இவரது கணவர் ராஜேந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றிய அவைத்தலைவராக இருப்பவர். சிறந்த களப்பணியாற்றுபவர்.என்றாலும் சாந்தி ராஜேந்திரன் தனது நிர்வாகத் திறமையை மட்டுமே நம்பிக்கையாகக் கொண்டு ஊராட்சியை நிர்வாகத்து வருபவர். இவர் பதவியேற்ற நான்காண்டு காலமாய் ஊராட்சி நலனை மட்டுமே தன் நலனாய் செயலாற்றி வருகிறார்.                       ஊராட்சி எங்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். ஊராட்சி முழுவதும் சாலை வசதி நிறைவாய் உள்ளது.          சோக் பிட் மூலம் சாக்கடை வசதி செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பின் தங்கிய மக்கள் 35பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப் பட்டது.. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் நிதியில் சமூக கூடம் கட்டப்பட்டுள்ளது.அதே சமயம்  வறண்ட நிலமான அப்பநாய்க்கன் பட்டி ஊராட்சியில்  வானம் பார்த்த பூமியாய் இருக்கும் நிலையிலும் பொது மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாது செய்து வருவது இவரின் நிர்வாகத் திறமைக்கு சான்று...பெண் ஊராட்சி தலைவர்கள் கணவனை சார்ந்தோ தந்தையை சார்ந்தோ இருக்கும் சூழலில் தனது கணவர் ராஜேந்திரன் திறன் மிகுந்த அரசியல் வாதியாக இருந்த போதும் சாந்தி ராஜேந்திரன் தனித்து இயங்குவது அப்பநாய்க்கன் பட்டி ஊராட்சியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் என்பது அய்யமில்லை.