Hot Posts

6/recent/ticker-posts

செ.தாமோதரன் எம்.எல.ஏ.தலைமையில் பூமி பூஜை

கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் சீரபாளையம் மற்றும் நாச்சிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர்நிதியில் இருந்து ரூபாய் 10லட்சத்து 75ஆயிரம்  மதிப்பீட்டில்வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையில்  முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரும்   கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான  செ.தாமோதரன்  கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை சண்முகம் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர், மதுக்கரை நகர செயலாளர்  சண்முகராஜா, மதுக்கரை ஒன்றிய பெருந்தலைவர் உதயகுமாரி, மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி,  சீரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன்,  சீரபாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உமாராணி பாலசுப்பிரமணியம், மதுக்கரை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர்கள் நாச்சிமுத்து உத்ராவதி, சிவசாமி, சீரபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மருதசாலம், ஆறுச்சாமி, நர்மதா, ராஜு, நாச்சிபாளையம் கிளைச் செயலாளர்கள் வேலுச்சாமி, வெங்கடாசலம், வெள்ளிங்கிரி, சீரபாளையம் கிளைச் செயலாளர்கள் ஆறுமுகம், லோகநாதன், பழனிச்சாமி, ஜெயபால், கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.