கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி தொண்டாமுத்தூர் ஒன்றியம் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் ரூபாய் 50,00,000/- மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை, தார்சாலை, மழைநீர் வடிகால் அமைக்க அனுமதியற்ற மனைப்பிரிவு வரன் மேம்பாட்டு நிதி மற்றும் ஊராட்சி பொது நிதி 2023 - 2024 இருந்து நிதி ஒதுக்கீடு செய்து இதற்காக பூமி பூஜையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளரும் . கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுக்கரை நகர செயலாளர் கே. சண்முகராஜா, தொண்டாமுத்தூர் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கனகராஜ், மாதம்பட்டி அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாதம்பட்டி ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாதம்பட்டி ஒன்றிய பொருளாளர் ஜி.பி.பாபு, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரசாத், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தனலட்சுமி ரமேஷ், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.