Hot Posts

6/recent/ticker-posts

செலக்கரிசல் ஊராட்சியின் செயல் படாத நிர்வாகம்...

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் செலக்கரச்சல் ஊராட்சி தலைவராக இருப்பவர் மரகத வடிவு கருப்புசாமி.

அ.தி.மு. க. வைச் சார்ந்த இவர் மீது ஊராட்சி நிர்வாகம் சரிவர செயல் படாது முடங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.மேலும் இவர் வளர்ச்சி பணிகளில் பாகு பாடு காட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்துள்ளது.

இதையடுத்து ஆட்சியர் கிராந்தி குமார் அதிகாரிகளுக்கு செலக்கரிசல் ஊராட்சி நிர்வாகத்தின் நிலையை பற்றி  அறிக்கை வெளியிட உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சி உதவி  இயக்குநர், வட்டார வளர்ச்சி அதிகாரி மேற்பார்வையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மரகதவடிவு, துணை தலைவர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். 

இதில் ஊராட்சி தலைவர் மரகதவடிவு ஊராட்சி நிர்வாகத்தை சீராக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தெரிய வந்தது. இதனை அதிகாரிகள் அறிக்கையாய் ஆட்சியருக்கு வழங்கினர்.

இதன் அடிப்படையில் ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை குறைக்கும் விதமாக காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்கம் செய்ததார்.