Hot Posts

6/recent/ticker-posts

மரக்கன்றுகள் நடும் விழா!!!


கோவை மாவட்டம் காட்டம்பட்டி ஊராட்சி குப்பேபாளையத்தில் உள்ள ஜாகோரன் ஸ்கை நிறுவனத்தின் நிதியுதவியுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில்  அன்னூர் வட்டம் காட்டம்பட்டி ஊராட்சியில் இருக்கும் குன்னத்தூர் குளத்தில் 400 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறறது.


நாம் உயிர்வாழ சுவாசக் காற்று தரும் மரக்கன்றுகள் வைத்திடும் இந்த நிகழ்வில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்  சத்யபிரியா பாலகிருஷணன்
அன்னூர் காவல் ஆய்வாளர்  நித்யா, காடட்டம்பட்டி  ஊராட்சிமன்ற தலைவர்  காயத்ரி பாலகிருஷ்ண்ன்,குன்னத்துர் ஊராட்சி மன்ற தலைவர்  கீதா தங்கராஜ், காட்டம்பட்டி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் எம். கே. துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர்  செல்வராஜ்,காட்டம்பட்டி ஊராட்சிமன்ற துணை தலைவர்  லட்சுமிகாந்த், வெற்றி சமூக சேவை  மணிகண்டன்,
 சிவசக்தி தங்கராஜ் ஆகியோரும், ஜாகரோன் ஸ்கை நிறுவன ஊழியர்களும்,
குழந்தைகளும், பொதுமக்களும் மற்றும் தன்னார்வலர்களும் திரளாக கலந்துகொண்டு  மரக்கன்றுகளை நட்டுவைதது விழாவினை சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் மா,சப்போட்டா, கடுக்காய், நெல்லி, பவளமல்லி, அத்தி, அகத்தி, ஆத்தி உட்பட 40 வகை மரக்கன்றுகள், 400 எண்ணிக்கையில் காட்டம்பட்டி குளத்தில்  வைக்கப்பட்டுள்ளன.