Hot Posts

6/recent/ticker-posts

சாமளாபுரம் குளக்கரை பொங்கல் விழா

 


தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. இந்த வருடம் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சாமளாபுரம் குளக்கரையை மையப்படுத்தி  சாமளாபுரம் குளக்கரையில் குளக்கரை சுற்றுலா பொங்கல் விழா  நடத்த  திட்டமிடப்பட்டது. சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம், சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை, திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு ஆகிய   அமைப்புகள் ஒருங்கிணைந்து  பொங்கல் விழாவை சிறப்பாக நடத்த முன்னேற்பாடு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்து ராஜ் அவர்கள் தலைமையில் குளக்கரை சுற்றுலா பொங்கல் விழா நடைபெற்றது .

சாமளாபுரம் குளக்கரையில் 101 பொங்கல் வைத்து  உள்ளூர் மக்கள் சிறப்பாக பொங்கலை கொண்டாடினர். மாவட்ட ஆட்சித் தலைவர்  பொங்கல் விழாவினை  தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 

கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


சாமளாபுரம் குளக்கரையில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் அவர்கள் கலை நிகழ்ச்சிகள்    நடைபெறும் இடத்திற்கு  மாட்டு வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர்.

சிலம்ப விளையாட்டு போட்டிகளை பார்வையிட்டு சிலம்பம் சுத்தினார் ஆட்சியர். கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு கலைஞர்களை உற்சாகப்படுத்ததினார். பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர்  உரி அடிக்கும் போட்டியில் பங்கேற்று உரி அடித்தார்.

பொதுமக்கள் கண்டுகளிக்க பெருஞ்சலங்கையாட்டம், தப்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றது.