Hot Posts

6/recent/ticker-posts

திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளையின் 108 தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேக அழைப்பிதழ்.


ஆதிசக்தியின் அனுஸ்டத்தினாலும்,சிவபெருமானின் அருளினாலும், திருமூலர்சித்தரின் வழிகாட்டுதலினாலும் 4000 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களும்' முனிவர்களும் இந்த பிரபஞ்சத்தின் நலனுக்காக செய்யப்பட்ட தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேகம் மாதந்தோறும் பெளர்ணமி (மற்றும்) அமாவாசை தினத்தன்று தேவாரம் பாடல் பெற்ற 276 திருக்கோவில்களுக்கும்,(மற்றும்) பிரசித்தி பெற்ற திருக்கோவில்களுக்கும்'மாதம் (இரண்டு) கோவில்களுக்கு' திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளையின் சார்பாக 108 தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.        அதன்படி இந்த மாதம் 59 வது கோவிலாக மூலிகை அபிஷேகம் நடைபெறும் கோவில்கள்.............23.1.2024 தைமாதம் 9 ந் தேதி செவ்வாய் கிழமை'                                  (பிரதோஷம்) மாலை 4:30  மணிக்கு சேலம் மாவட்டம்,மேச்சேரி, புக்கம்பட்டி, நரிமலையில் அமைந்துள்ள' பேரருள்மிகு   ஸ்ரீ மாதேஸ்வரர் ஆலயத்தில் 108 தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேகம் நடைபெறுகிறது. அதுசமயம் பக்தர்கள் அனைவரும் இந்த தெய்வீக மூலிகை அபிஷேகத்தில் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது🙏சிறப்புகள்🙏....... இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ மாதேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்! இத்தலம் பாவ விமோச்சன தலமாக விளங்குகிறது!........ (2)...........................இதனை தொடர்ந்து 60 வது கோவிலாக'25.1.2024 தைமாதம் (பெளர்ணமி)11 ந் தேதி வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அருகே விளக்கேத்தியில் அமைந்துள்ள பேரருள்மிகு வித்தகநாதீஸ்வரர், தாயார் விமாலாம்பிகை ஆலயத்தில் 108 தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேகம் நடைபெறுகிறது. அதுசமயம் பக்தர்கள் அனைவரும் இந்த மூலிகை அபிஷேகத்தில் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது

🙏சிறப்புகள்🙏இத்தல இறைவன் வித்தகநாதீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்! இத்தலம் 600 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற சித்தர் தலமாக திகழ்கிறது!...............(1).இப்பகுதியில் வாழ்ந்த சித்தர் ஒருவர் தினந்தோறும் இத்தல இறைவனை விளக்குகள் ஏற்றி வழிபட்டு வந்ததால் அவருக்கு விளக்கேத்தி சித்தர் என்ற பெயரும்! இவ்வூருக்கு விளக்கேத்தி என்ற பெயரும் வந்தது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்!........(2).இத்தல இறைவனை விளக்குகள் ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணத்தடை கள் நீங்கும்! பிணிகள் நீங்கும்!பாவதோசங்கள் நீங்கும்!கிரகதோசங்கள் நீங்கும் என்பது இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்!.....(3).விளக்கேத்தி சித்தர் என்பவர் இந்த ஆலய இறைவனை தினந்தோறும் விளக்கேற்றி வழிபட்டு இந்த ஆலயத்திலையே பதிகொண்டுள்ளார்'என்பது இந்த ஆலயத்தின் மேலும் ஒரு சிறப்பம்சமாகும்!..... இப்படிப்பட்ட இந்த ஆலய இறைவனை  விளக்கேற்றி வழிபட்டு நாமும் நம் வாழ்வில் வளம் பெறுவோம்!....................  இங்ஙனம்: திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை, எடப்பாடி,சேலம் மாவட்டம்,கைபேசி:9488453431.